சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்திலின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்போ செந்திலின் இருப்பிடத்தை கண்டறிய தேசிய தகவல் மையத்தின் உதவியை சென்னை போலீஸ் நாடியுள்ளது. சம்போ செந்திலின் கூட்டாளி ஈஷாவிடம் இருந்து 10 இண்டர்நெட் அழைப்பு எண்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டிய விவகாரத்தில் சம்போ செந்தில் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த ஓராண்டாக தனது கூட்டாளிகளிடம் இண்டர்நெட் கால் மூலம் பேசி வந்தது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து தெரிவிக்க தேசிய தகவல் மையம் உதவுகிறது.
சம்போ செந்திலை பிடிக்க தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடியது போலீஸ்
previous post