ராஞ்சி: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் கடந்த புதனன்று கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் சம்பாய் சோரன் நேற்று பாஜவில் இணைந்தார். ராஞ்சியில் நடந்த விழாவில் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில் ஏராளமான தனது ஆதரவாளர்களுடன் சம்பாய் சோரன் பாஜவில் தன்னை இணைத்துக்கொண்டார்.