கர்நாடகா: சாமராஜநகர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 36 பேர் இறந்த விவகாரத்தில் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் மறு விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஆணையிட்டார். 36 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடைபெறவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்தார்கள் என்பதை உறுதி செய்யவே மறு விசாரணை என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.