தேவையானவை:
சாமை அரிசி – 2 கப்
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை,
லவங்கம் – தலா ஒன்று
நறுக்கிய கேரட், காலிப்ளவர், பட்டாணி,
குடைமிளகாய், பீன்ஸ் கலவை – 2 கப்
இஞ்சி, பூண்டுவிழுது – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
நெய், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சாமை அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் கலந்த நெய் 2 மேஜைக்கரண்டி விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த சாமை அரிசியிலிருந்து தண்ணீரை வடிகட்டி, குக்கரில் சேர்க்கவும். அதனுடன் இரண்டுபங்கு தண்ணீர் சேர்த்து, வேகவைத்த காய்கறி கலவையைச் சேர்த்து உப்பும் சேர்த்து கலந்து மூடவும். 2 விசில் வந்ததும் அணைத்துவிடவும். சுவையான சாமை புலாவ் தயார்.