ஆலங்குளம்: நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 6ம் தேதி விஜயகுமார் என்பவர் ரூ.260 மதிப்புள்ள மது வாங்கியபோது விற்பனையாளர் ரூ.265க்கு ரசீது கொடுத்துள்ளார். மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் விஜயகுமார் வாடஸ்ஆப் மூலம் புகார் அளித்ததை அடுத்து விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.