சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் உபபொருட்களின் விற்பனையை 20% அதிகரிக்க பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமூன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட், தயிர் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பால் உபபொருட்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலம் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் தங்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.