சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ராஜமாணிக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் ராஜமாணிக்கத்தை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.