சென்னை: சேலம் ராமர் பாதம் கோயிலுக்கு செல்ல உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்திய தாசில்தார் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு நிறுவன குத்தகை நிலத்தில் உள்ள கோயிலுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்திய ஆணைக்கு தடை விதிக்கப்பட்டது. சேலம் மாமாங்கத்தில் ஒன்றிய அரசின் செயில் ஆலை சில நிலங்களை குத்தகைக்கு எடுத்து பணிகளை மேற்கொண்டுவருகிறது. ராமர் பாதம் கோயிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு அந்நிறுவனம் அனுமதி மறுத்ததாக புகார் எழுந்தது. செப்.6-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தாசில்தாருக்கு உத்தரவிட்டு ஐகோர்ட் வழக்கை ஒத்திவைத்தது.