ஓமலூர்: பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் அளித்த பேட்டி: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரியார் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஆராய்ச்சி பூங்கா பட்டர் பார்க் சார்பில் தொழில் 4.0 தொழில்நுட்பம் ஒன்றிணைத்தல் எனும் தலைப்பில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கான சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இதனையொட்டி முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், ‘பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஆராய்ச்சி பூங்கா சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் செயற்கை கோள் ஆராய்ச்சி முதன்மை மையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் தோராயமாக 50 செயற்கைக்கோள் ஆராய்ச்சி இணைப்பு மையங்களை நிறுவவும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் 50 செயற்கைக்கோள் ஆராய்ச்சி இணைப்பு மையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளது’ என்றார்.