சேலம்: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் உதவி வருவாய் அலுவலராக பணியாற்றி வருபவர் முருகேசன்(55). இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் முருகேசன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து நேற்று சின்னதிருப்பதில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.