சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,114 கனஅடியில் இருந்து 4,138 கனஅடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் 48.36 அடியில் இருந்து 48.86 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 17.10 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.