கெங்கவல்லி, அக்.29: ஆத்தூர் வெள்ளப்பிள்ளையார் கோயில் 400 ஆண்டு பழமையான கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நவம்வர் 16ம் தேதி நடக்கிறது. நேற்று முன்தினம், கோயில், கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடக்க வேண்டி, விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின் தலைமையில், காப்பு கட்டுதல், முளைப்பாரி இடுதல் நடைபெற்றன. நிகழ்ச்சியில், அறங்காவலர்கள் சித்ரா மணிகண்டன், குகன், சிவக்குமார், மதுரைமேகம், ஆத்தூர் நகராட்சி கவுன்சிலர் ஜீவா ஸ்டாலின், வெள்ளப் பிள்ளையார் கோயில் செயல் அலுவலர் சங்கர், கோயில் அர்ச்சகர்கள் முருகேசன், கணேசன், தேவராஜன் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
+
Advertisement


