சேலம்: சேலத்தில் ராணுவ தளவாட ெதாழிற்சாலை அமைப்பது குறித்த அறிவிப்பு இன்னும் 5 மாதத்தில் ெவளியாகும் என ஒன்றிய கனரக தொழில் மற்றும் எக்குத்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி கூறினார்.
ஒன்றிய அரசின் ெபாதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையில் கடந்த 2 நாட்களாக ஒன்றிய கனரக தொழில் மற்றும் எக்குத்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆய்வு ெசய்தார். அவர், ஆலையில் உற்பத்தி செய்யப்படும் துருப்பிடிக்காத எக்கு உற்பத்தி ெபாருட்களையும், அதன் தயாரிப்பு பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், சேலம் உருக்காலையை விரிவாக்கம் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டத்ைத அதிகாரிகளுடன் நடத்தினார். செயில் அமைப்பின் முதன்மை நிர்வாக இயக்குநர் அமரேந்து பிரகாஷ், சேலம் உருக்காலை நிர்வாக இயக்குநர் பி.கே.சர்க்கார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நேற்று காலை உருக்காலை வளாகத்தில் நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சியில் 200க்கு மேற்பட்ட பணியாளர்கள், மாணவ, மாணவிகளுடன் அமைச்சர் எச்.டி.குமாரசாமியும் யோகா செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் உருக்காலையை பாதுகாத்து தொழில்நுட்ப ரீதியாகவும், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2003-04ல் சேலம் உருக்காலை ரூ.180 கோடி வருவாய் ஈட்டிக்கொடுத்தது. அதன்பின், 15 ஆண்டுகளாக அதன் உற்பத்தி, வணிகம் குறைந்திருக்கிறது.
அதனால், மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து, சேலம் உருக்காலையை மேம்படுத்தி லாபகரமாக இயக்குவதைத்தான், முதன்மையான நோக்கமாக கொண்டுள்ளோம். இதற்காக பல்வேறு புதிய பொருட்கள் உற்பத்தி ெசய்யப்படுகின்றன. சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கும் திட்டம் முதற்கட்ட ஆலோசனையில் உள்ளது. இதுதொடர்பாக இன்னும் 4, 5 மாதங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார். கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் ெவளியிட எதிர்ப்பு ஏற்பட்டது குறித்த கேள்விக்கு, தக்ைலப் ஒரு திரைப்படம், அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.