Sunday, March 3, 2024
Home » சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய மாணவர் அமைப்பினர் கைது

சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய மாணவர் அமைப்பினர் கைது

by MuthuKumar

சேலம்: சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்கள் கைது செய்யபட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைகழக மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணை வேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

ஊழல் வழக்கில் கைது செய்யபட்டு ஜாமினில் உள்ள பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து பேசுவதற்காக இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவுள்ளார். இந்த கூட்டமானது 12.50 மணிக்கு தொடங்கி 2 மணி வரை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆளுநர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருவது குறித்து பெரியார் பல்கலைகழகத்தில் பணியாற்ற கூடிய ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஆளுநர் ஒரு குற்றம் சாட்டபட்ட்வரை சந்திக்க வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் கூட்டமைப்பினர் இன்று காலை முதலே பெரியார் பல்கலைகழகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இந்த போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கல் திறண்டு வந்து இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திராவிடர் மாணவர் கழகம், திமுக மாணவர் அணி, மதிமுக மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் பெருமன்றம், தமிழ்நாடு மாணவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக ஆளுநரே வெளியே போ, ஆளுநரே வெளியேறு என்ற கோசங்களை முன்வைத்து மாணவர் அமைப்பினர் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆளுநர் சற்று நேரத்தில் பெரியார் பல்கலை.க்கு வர இருப்பதன் காரணமாக காவல்துறையினர் மாணவர்களை கைது செய்து வருகின்றனர். ஒருபுறம் போலீஸ் சோதனை, மறுபுறம் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் என சேலம் பெரியார் பல்கலை.யில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

You may also like

Leave a Comment

ten − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi