சேலம்: சேலம் மாநகராட்சி ஆணையர் பெயரில் போலியான X, இன்ஸ்டாகிராம் கணக்குகள் இயங்கி வருகிறது இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரஞ்ஜீத் சிங்கின் புகைப்படத்தை பயன்படுத்தி, ஆதரவற்ற குழந்தைகளின் சிகிச்சைக்கு என பலரிடம் பணம் திரட்டும் வேலையும் இந்த போலி கணக்குகள் மூலம் நடந்துள்ளன. ரஞ்ஜீத் சிங் அளித்த புகாரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி ஆணையர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்குகள்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
0