சென்னை: சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுக்கால் விற்பனை செய்த கடைக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆயிரக்கணக்கான கெட்டுப்போன ஆட்டுக்கால்களை பதப்படுத்தி விற்பனை செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. கெட்டுப்போன சுமார் 700 கிலோ ஆட்டுக்கால்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கெட்டுப்போன ஆட்டுக்கால்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட உள்ளன.