ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் போதை கலாசாரத்திற்கு எதிரான மாரத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்தபின், கடந்த 3 ஆண்டுகளில் 32 ஆயிரத்து 404 கடைகளில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் இருப்பது கண்டறியப்பட்டு, அங்கு இருந்த ₹20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 478 மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 17 ஆயிரத்து 481 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ₹33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.