சென்னை: தொழில் முதலீடு செய்ய தமிழ்நாட்டை போல் சிறந்த இடம் இல்லை என கூறிய Saint gobain சிஇஓவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் வேகம், செயலாற்றல், வெளிப்படைத் தன்மைக்கு சந்தானத்தின் நற்சான்றே சாட்சி. தெற்கு ஆசியாவிலேயே தமிழ்நாடு முதலீடு செய்ய சிறந்த இடம் என்று கூறியதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.