சென்னை: மின்சார ரயிலில் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த கண்ணன், வேலவன், கத்தி வைத்திருந்த ஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மூவரையும் காவல் நிலைய ஜாமினிலேயே அவர்கள் விடுவித்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று இரு பிரிவுகளாக கற்களை வீசி பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர்