கொல்கத்தா: கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் தத்தளித்த 11 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மற்றும் டோர்னியர் விமானம் மூலம் 11 பேர் மீட்கப்பட்டனர். சாகர் தீவின் தெற்கே 90 நாட்டிகல் மைல் தொலைவில் சரக்கு கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டனர்.