முத்துப்பேட்டை: திருவாரூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசால் கொண்டு வரப்படும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் இந்த மண்ணில் நடைமுறைபடுத்தக்கூடாது. மோடி பொறுப்பேற்ற பிறகு தனக்கு ஒத்துவராத மாநில கட்சிகளை மிரட்டி தங்கள் பிடிக்குள் கொண்டு வருவதற்கு கையாளுகிற துறை தான் அமலாக்கத்துறை.
நடிகர் விஜய் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுகிறார். எவ்வளவு சதவீதம் வாக்குகளை பெறுகிறார் என்பதை பொறுத்து தான் அவருக்கான பலம், பலவீனம் குறித்து பேச முடியும். திமுக தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளது என்பது உண்மை. தமிழ்நாட்டில் பாஜ அரசியல் அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது. தமிழக கோட்டையில் காவிக்கொடி பறக்கவிடாமல் தடுக்கும் அரணாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.