மதுரை: பாதுகாப்பு குறைபாடு காரணமா?: எரிந்த ரயில் பெட்டியில் எண்ணெய் கேன்கள், ஸ்டவ் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்து சிதறியதுபோது விறகு கட்டைகள் வைத்திருந்த கழிவறைக்குள் விழுந்ததால் அதுவும் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் விறகுகள், மண்ணெண்ணெய் கேன்கள், பாத்திரங்கள், சமையல் எண்ணெய் கண்டெடுக்கப்பட்டது. விபத்துக்கு உள்ளான ரயில் பெட்டியில் அதிக அளவு சமையல் பாத்திரங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
ஒரு கழிவறை முழுவதும் சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய விறகு கட்டைகளை சுற்றுலா வந்தவர்கள் ரயிலில் எடுத்துவந்துள்ளனர். ரயில் பெட்டியின் ஒரு கழிவறை முழுவதும் விறகு கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான ரயில்வே அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியில் சிலிண்டர் மற்றும் விறகு கட்டைகளை எடுத்துவர ரயில்வே அதிகாரிகள் அனுமதித்தது எப்படி? எனவும் கேள்வி எழுந்துள்ளது. ரயிலில் நடந்த தீ விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.