ஆஸி அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர். இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார். ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் முதலிடத்தில் விராட் கோலி உள்ளார்.
சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
0