நெல்லை: சபரிமலை சீசனை முன்னிட்டு நெல்லை – சென்னை இடையே வியாழன் தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சபரிமலை சீசனை முன்னிட்டு, கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக 16ம் தேதி (நாளை) முதல் டிச.28ம் தேதி வரை வியாழக்கிழமைகள் தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்.06067) சென்னையில் இருந்து வியாழக்கிழமை தோறும் காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து (வண்டி எண்: 06068) மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது. இரு மார்க்கத்திலும் திருச்சி ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக கூடுதலாக 5 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.