திருவனந்தபுரம்: வருடம்தோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வருட பிரதிஷ்டை தினம் ஜூன் 5ம் தேதி ஆகும். இதை முன்னிட்டு முந்தைய நாள் (4ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.
5ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜைகள் தொடங்கும். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை ஜூன் 14ம் தேதி திறக்கப்படும்.