திருவனந்தபுரம்: பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வருட பிரதிஷ்டை தினம் நாளை (5ம் தேதி) ஆகும். இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜைகள் நடைபெறும். நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக வரும் 14ல் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
0