சென்னை: சபரி மலை செல்லும் பக்தர்கள் சாமி கும்பிடுவதற்கு நீண்ட நேரம் அவது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் கேரள தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கேரள மாநில தேவஸ்தான அமைச்சரிடம் தமிழக அமைச்சர் சேகர் பாபு பேசிவருவதாக தெரிவித்துள்ளார்.
பக்த்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தொடர்ந்து வழியுறுத்தி வருவதாகவும், மிகப்பெரிய பக்தர்களின் கூட்டத்திலும் இதுவரை எதும் பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த 45 ஆண்டுகளாக சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு பக்தர் என்கிற முறையில் தான் செல்வதாகவும், ஆனால் இந்த வருடம் வரலாறு காணாத கூட்டம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரு மணி நேரத்தில் ஐய்யப்பனை சுமார் 3,500 பேர் தரிசனம் செய்வதாகவும், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் நடை திறந்து இருப்பதால் 58,000 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் நாள் தோறும் 1 லட்சம் பக்கதர்கள் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக கூட்டத்தை சமாளிக்க முடியாத ஒரு சூழல் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலிலும் அதனை கேரள அரசு திறமையாக கையாண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.