பெர்லின், ஜூன் 22: ஜெர்மனின் பெர்லின் நகரில், பெர்லின் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா (27), செக் வீராங்கனை மார்கெடா வோன்ட்ரசோவா (25) மோதினர். துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய வோன்ட்ரசோவா, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம், அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை வாங் ஸிங்யு, ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா சாம்சனோவாவை, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
சபலென்காவை வீழ்த்தி சாகசம்: ஒன்டர்ஃபுல் வோன்ட்ரசோவா
0