தேவையானவை:
கம்பு மாவு – 300 கிராம்,
ஜவ்வரிசி மாவு – 25 கிராம்,
காய்ந்த மிளகாய் – 5, பூண்டு,
சின்ன வெங்காயம் (இரண்டும் பொடியாக நறுக்கியது) – தலா 3 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – தேவையான அளவு,
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். கம்பு மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கை விடாமல் கிளறி கூழ்போல் காய்ச்சவும். காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், பெருங்காயத்தூள், உப்பு இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து கூழுடன் சேர்த்துக் கிளறவும். அனைத்தும் சேர்ந்து நன்கு கெட்டியானதும் இறக்கி ஆற வைத்து பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு வட்டமாகத் தட்டி வெயிலில் காய வைக்கவும்.