மாஸ்கோ: 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற ரஷ்யாவின் எம்.ஐ.-8டி ரக ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல் வெளியாகியது. ரஷ்யாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களில் திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடர்பை துண்டித்தது.
இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேருடன் சென்ற ரஷிய ஹெலிகாப்டர் நாட்டின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியானது. இந்நிலையில், மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 1960 களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டரான எம்ஐ-8 ரஷியாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.