கீவ்: உக்ரைன் – ரஷ்யா போர் 3வது ஆண்டாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் சிதிலமடைந்து விட்டன. இந்த போரில் ஆரம்பத்தில் பலத்த அடி வாங்கிய உக்ரைன் தற்போது ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்யா, உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் மத்திய கிழக்கு உக்ரைனின் பொல்டாவா நகரில் உக்ரைனின் ராணுவ பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இதன்மீது ரஷ்யா நேற்று நள்ளிரவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. இதேபோல் ராணுவ பயிற்சி மையத்தின் அருகில் உள்ள மருத்துவமனை மீதும் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் நோயாளிகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். மற்றும் 180 பேர் படுகாயமடைந்தனர்.