மாஸ்கோ: கிழக்கு ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள வச்கஜெட்ஸ் எரிமலை அருகே இருந்து 19 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் ஒரு எம்ஐ-8 ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களிலலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து 22 பேருடன் மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்நிலையில் மாயமான ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் கிழக்கு ரஷ்யாவின் மற்றொரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 பேரின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.