சென்னை: கிராமப்புறங்களில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : கிராமங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்வு செய்து, அந்த பகுதியில் உள்ள தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிக்சை அளிப்பதற்கான வசதிகள் தனியார் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும் என
நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் வகையில் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் டயாலிசிஸ் மையங்களை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை: அரசாணை வெளியீடு
0