சென்னை: ஊரகப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரூ.500 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 22,051 சிறுபாசன ஏரிகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.500 கோடியில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்ந்து சிறுபாசன எரிகள் புனரமைப்பு பணிகள் நடைபெறும். தூர்வாருதல், ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி, மதகு போன்ற கட்டமைப்புகள் புனரமைக்கப்படும். பயன்பாட்டாளர்கள் குழு இல்லாத இடத்தில் புதியதாக அழைத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.