சென்னை: ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை சாத்தியமாக்க கிராமப்புற தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டம் வளர்ந்து வருவதாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம் அளித்துள்ளார். கிராமப்புற பகுதிகளுக்கு வரும் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.