மகாராஷ்டிரா, நாசிக்கில் உள்ள கரன்சி நோட்டு அச்சகத்தில் 112 இடங்கள் காலியாக உள்ளன. ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Supervisor (Technical- Printing): 2 இடங்கள். சம்பளம்: ரூ.27,600- 95,910. தகுதி: பிரின்டிங் பாடத்தில் முதல் வகுப்பில் டிப்ளமோ இன்ஜினியரி்ங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 30க்குள்.
2. Supervisor (Official Language): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.27,600-95,910. தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்துடன் ஹிந்தி பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஹிந்தியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 30க்குள்.
3. Secretarial Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.23,910-85,570. தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் பணி அனுபவம், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுருக்கெழுத்து எழுதும் திறனும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 30க்குள்.
4. Junior Technician (Printing/Control): 92 இடங்கள் (பொது- 45, பொருளாதார பிற்பட்டோர்- 8, ஒபிசி-23, எஸ்டி-10, எஸ்சி-6). சம்பளம்: ரூ.18,780-67,390. தகுதி: Printing பாடப்பிரிவு அதாவது லித்தோ ஆப்செட் மிஷின் மைண்டர்/லெட்டர் பிரஸ் மிஷின் மைண்டர்/ஆப்செட் பிரின்டிங்/ பிளேட் மேக்கிங்/எலக்ட்ரோ பிளேட்டிங் ஆகிய பாடங்களில் ஐடிஐ தேர்ச்சி.
5. Junior Technician (Workshop): சம்பளம்: ரூ.18,780- 67,390.
i) Workshop (Electrical): 6 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் பாடத்தில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) Machinist: 2 இடங்கள். தகுதி: மெஷினிஸ்ட் பாடத்தில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iii) Fitter: 4 இடங்கள். தகுதி: பிட்டர் டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iv) Electronics: 4 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் ஐடிஐ சான்றிதழ்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு: 18 முதல் 25க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹200/-. இதை ஆன்லைனில் செலுத்தலாம்.
https://cnpnashik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2023.