சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், அரசனட்டி கிரீன்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தருண் (19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கோவைக்கு சென்றிருந்த தருண், நேற்று காலை தனது நண்பர்கள் இருவருடன், கல்லூரி செல்வதற்காக கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் பயணித்தார். ரயில் சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து நின்றதும், தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக மாணவர் தருண் கீழே இறங்கினார். பிளாட்பார்மில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டிருந்த போது, ரயில் புறப்பட்டது. உடனே வேகமாக ஓடிச்சென்று ரயில் பெட்டியில் தருண் ஏறினார். அப்போது, படிக்கட்டில் கால் தவறி பிளாட்பார்மிற்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு அலறி துடித்தார். இதனை பார்த்த சக பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், தருண் படுகாயங்களுடன் பத்திரமாக மீட்டனர்.
ஓடும் ரயிலில் ஏறியபோது இடையில் சிக்கிய மாணவர்
previous post