நெல்லை : நாங்குநேரியில் இருந்து நெல்லை சந்திப்பிற்கு மீண்டும் அரசு பேருந்து சேவையை தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் நாங்குநேரியில் நடந்த விழாவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நாங்குநேரியில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு நகரப்பேருந்து கடந்த சில மாதங்களாக சரிவர இயங்காமல் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அதனை அறிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் மேற்கொண்ட முயற்சியினால் புதிய பேருந்து அந்த வழித்தடத்திற்கு ஒதுக்கப்பட்டது.
அதனை நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் நாங்குநேரியில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின் அவரே பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.
இந்த அரசு பேருந்து ஒரு நாளைக்கு நாங்குநேரி-நெல்லை சந்திப்பு வழித்தடத்தில் ஆறு முறை சென்று வரும். அரசு நகரப்பேருந்து என்பதால் இதில் மகளிருக்கு விலையில்லா பயணச்சீட்டு என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் புதிய பேருந்து இயக்கப்பட்டதால் அந்த பேருந்தை முன்பு பயன்படுத்தி வந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் நாங்குநேரி எம்எல்ஏவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
நிகழ்வில் நாங்குநேரி முன்னாள் எம்எல்ஏ எஸ்வி.கிருஷ்ணன், நாங்குநேரி பேரூராட்சி தலைவர் கல்யாணி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர்கள் செல்லப்பாண்டி, ராஜகோபால், மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தலைவர் சிவனுபாண்டி, நாங்குநேரி நகர திமுக செயலாளர் வானுமாமலை,
மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, ஒபேத், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, கிழக்கு வட்டார தலைவர் ரவிந்தீரன், வடக்கு வட்டார தலைவர் அம்புரோஸ், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், நாங்குநேரி மதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பேச்சிமுத்து, கம்யூனிஸ்ட் கட்சி கணேசன், முன்னாள் ஏஐசிசி வசந்தா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட இணை செயலாளர் ராமநாதன், மாநில ஓபிசி பொதுச்செயலாளர் வின்சென்ட், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடையார், பாலம்மாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.