புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக மோகன் பகவத் உள்ளார். அவருக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஒன்றிய உளவுத்துறை அளித்த எச்சரிக்கையை தொடர்ந்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்பு பா.ஜ இல்லாத மாநிலங்களில் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்ற புகார் அடிப்படையில் இந்த உயர்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் சோனியா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகிய 5 பேருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர்களுடன் இப்போது மோகன்பகவத்திற்கும் இந்த உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.