சென்னை: அதிமுக ஆட்சியில் (2017 -18) போட்டித் தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 55,000 மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவாத காலம் காலாவதியாகியதால் அரசுக்கு ரூ.68.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட 60,000 மடிக்கணினிகளில் 8,079 மடிகணினிகள் மட்டுமே போட்டி தேர்வு எழுத மாணவர்களுக்கு வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.