Thursday, February 22, 2024
Home » கடந்த மாதம் மாநகர பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் ரூ.4,71,600 அபராதம் வசூல்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

கடந்த மாதம் மாநகர பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் ரூ.4,71,600 அபராதம் வசூல்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

by Francis

சென்னை: கடந்த ஜனவரியில் மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 4,223 பயணிகளிடம் இருந்து அபராதத் தொகை ரூ.4,71,600 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், உரிய பயணச்சீட்டு மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது, மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் 178(பி) பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றம். இதனால், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

இதனை வலியுறுத்தி, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணச்சீட்டு பரிசோதகர்களைக் கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத் தொகை அதிகபட்சமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் கடந்த ஜனவரி மாதம் பயணம் செய்த 4,223 நபர்களிடம் அபராத தொகையாக ரூ.4,71,600 வசூலிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

8 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi