சேலம்: விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதாரண நெல் ரகம் குவிண்டாலுக்கு ரூ.131, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.156ஆக உயர்த்தி வழங்கப்படும். சாதராண நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,545 தரப்படும். நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். சேலம் மாநகராட்சியில் ரூ.100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும், சிறுபாலங்கள் அமைக்கப்படும். சேலம் மாநகராட்சி தொகுதிகளில் ரூ.100 கோடியில் சாலை மேம்பாடு, கழிவுநீர் கால்வாய் பணி, சிறு பாலங்கள் அமைக்கப்படும். தலைவாசலில் ரூ.10 கோடியில் வேளாண் விற்பனை நிலையம் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 – முதலமைச்சர் அறிவிப்பு
0