அகமதாபாத்: அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் பிவாண்டி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் ரகசிய தகவலின்பேரில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது 800கிராம் எடைகொண்ட மெபெட்ரோன் போதைப்பொருளுடன் சகோதரர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.800கோடியாகும். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.