சேலம்: சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் அலுவலகத்தில் எஸ்எஸ்ஐயாக இருப்பவர் சரவணன், இவர், கட்டப்பஞ்சாயத்து செய்து, ரூ.5 லட்சம் கமிஷனாக பெற்றதாகவும், தனக்கு வரவேண்டிய ரூ.80 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் நகை கடைக்காரர் முரளி புகார் செய்தார். மேலும், முரளியிடம் எஸ்எஸ்ஐ சரவணன், நான் காவல்துறையில் 32ஆண்டுகள் வேலை செய்து விட்டேன்.
என் மீது நீங்கள் புகார் கொடுத்தால் சஸ்பெண்ட் செய்வார்கள். 4வது மாதம் நான் பணியில் சேர்ந்து விடுவேன் என கூறிய வீடியோ காட்சிகளையும் முரளி வெளியிட்டார். இதையடுத்து எஸ்எஸ்ஐ சரவணனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.இந்நிலையில் 3 துணை கமிஷனர் அலுவலகம், 6 உதவி கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் போலீசாரின் பின்னணி குறித்தும் கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.