புதுடெல்லி: கேரளாவில் அதிக அளவு ஹவாலா பணப்பரிமாற்றம் நடப்பதாக வந்த புகார் அடிப்படையில் 14 இடங்களில் ஜூன் 19ம் தேதி அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. பரிசுக் கடைகள், ஜவுளி, நகைகள் மற்றும் ஆயத்த ஆடை விற்பனை நிலையங்களை நடத்தும் நிறுவனங்களை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 நாடுகளின் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஹவாலா மூலம் ரூ.300 கோடிக்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கோட்டயத்தைச் சேர்ந்த வி.எஸ்.சுரேஷ் பாபு, ஏ.கே.ஷாஜி என்கிற பாயசம் ஷாஜி, முகமது ஷிபு, ஏட்டுமானூரைச் சேர்ந்த முகமது ஷிஜு, எர்ணாகுளத்தைச் சேர்ந்த சிராஜ் வி.எஸ்சகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.300 கோடி ஹவாலா பரிமாற்றம் கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது: அமலாக்கத்துறை அதிரடி
149
previous post