நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நாகையகவுண்டம்பட்டி பிரிவு தனியார் பெட்ரோல் பங்க் அருகே நேற்று அதிகாலை சந்தேகத்திற்கிடமாக ஒரு கார் நின்றிருந்தது. அங்கு ரோந்து வந்த அம்மையநாயக்கனூர் போலீசார், காரில் இருந்தவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் ரூ.26,500, கலர் ஜெராக்ஸ் மெஷின் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. அப்போது ஒருவர் தப்பியோடி விட்டார். காரில் இருந்த விருதுநகர் மாவட்டம், காந்திநகரை சேர்ந்த அழகர் (28), மதுரை, கூடல்புதூரை சேர்ந்த ராஜா (27), முருகேசன் (30), வளையங்குளத்தை சேர்ந்த சிவமணி என்ற மணிகண்டன் (26), அவரது மனைவி ஜெனித்தா (24), வில்லாபுரத்தை சேர்ந்த ரவி (64) ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய கோட்டைச்சாமியை (31) தேடுகின்றனர்.