Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராயபுரம், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் மூடப்பட்டு, ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் நேற்று பயன்பாட்டிற்கு வந்தன. பிராட்வே பேருந்து நிலையத்தில், ரூ.822.70 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிராட்வே பேருந்து நிலையம் நேற்று முதல் மூடப்பட்டு, ராயபுரம், தீவுத்திடல் ஆகிய பகுதிகளில் 2 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்களை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். அதை தொடர்ந்து, நேற்று முதல் இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

* ராயபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம்: 11, 21, 26, 52, 54, 60, 10இ, 11ஜி, 11எம், 155ஏ, 17இ, 17கே, 188சி, 188இ.டி., 18ஏ, 18ஏ சியுடி, 18பி, 18டி, 18இ, 18கே, 18பி, 18ஆர், 18ஆர் எக்ஸ், 18எக்ஸ், 21சி, 26பி, 26ஜி, 26கே, 26எம், 26ஆர், 51டி, 51ஜெ, 52பி, 52ஜி, 52கே, 54ஜி, 54எல், 5சி, 60ஏ, 60டி, 60ஜி, 60எச், 88சி, 88கே, 88கே இ.டி., 9எம் இ.டி., ஏ51, டி51 இ.டி., இ18, இ51, எம்51ஆர்.

* ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 101சிடி, 101எக்ஸ், 53இ, 53பி, 71டி, 71இ, 71எச், 71வி, 120, 120சிடி, 120எப், 120ஜி, 120கே, 150.

* அண்ணாசாலை மற்றும் ஈவெரா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் போது ஏற்கனவே அமைந்துள்ள நர்ஸ் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்திலும், வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்ததிலும் நின்று பயணிகளை இறக்கி, ராஜாஜி சாலை வழியாக ராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

* ராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், வடக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

* தீவுத்திடலில் இருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு: 6, 13, 60இ, 102, 109, 102சி, 102கே, 102பி, 102எஸ், 102எக்ஸ், 109ஏ, 109எக்ஸ், 21ஜி, 21எல், 21இ இ.டி.

* கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 1, 4, 44, 330, 33எல், 38ஏ, 38ஜி, 38எச், 44சி, 44சிடி, 4எம், 560, 56டி இ.டி., 56ஜெ, 56கே, 56பி, 570, 57எப், 57எச், 57ஜெ, 57எம், 8பி, சி56சி, சி56சி இ.டி., 557ஏ இ.டி.,

* மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33பி, 56சி, 56எப்.

* ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 155, 156, 17டி, 20ஏ, 20டி, 50இ.டி., 50எம்.

* வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 35, 42, 242, 1428, 142பி, 35சி, 428, 420, 42டி, 42எம், 640, 64கே, 64கே இ.டி., 7இ, 7எச், 7கே, 7எம், 7எம் இ.டி.

* கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரீஸ் கார்னர் சிக்னல், வடக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

* மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது எஸ்பிளனேடு சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

* ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ஏற்கனவே அமைந்துள்ள நர்ஸ் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி வலதுபுறம் திரும்பி முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

* காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள பாரிஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி என்.எஸ்.சி.போஸ் சாலை, எஸ்பிளனேடு சாலை வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

* தீவுத்திடலில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி எஸ்பிளனேடு சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள ரங்கவிலாஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

* ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

* காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம், எஸ்பிளனேடு சாலையில் வலதுபுறம் திரும்பி என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள டேர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும், என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

* 140 வழித்தடங்களில் 861 பஸ்கள் இயக்கம்

ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 4.30 மணிக்கு பேருந்து சேவை தொடங்கும். இங்கிருந்து 67 வழித்தடங்களில் 335 பஸ்களும், தீவுத்திடலில் இருந்து 73 வழித்தடங்களில் 526 பஸ்களும் தினசரி இயக்கப்படுகின்றன.