ராயல் என்பீல்டு நிறுவனம், விங்மேன் என்ற தொழில்நுட்ப வசதியை தனது மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்க உள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப வசதி மூலம், வாகனம் எந்த இடத்தில் உள்ளது, சராசரியாக சென்ற வேகம், எரிபொருள் குறைந்தால் எச்சரிக்கை செய்வது, எந்த இடத்தில் கடைசியாக பார்க்கிங்செய்யப்பட்டது போன்ற விவரங்களை, மொபைல் ஆப்ஸ் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இதுபோல், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிரிட் குழுவிடம் இருந்து உதவி பெறலாம். வாகனம் நடுவழியில் நின்று விட்டால் குழுவை தொடர்பு கொண்டு வாகனத்தை மீட்டுவர இது உதவும். என்பீல்டு சூப்பர் மெட்டியோர் பைக் வாங்குவோர், கூடுதலாக ரூ.6,500 செலுத்தி விங்மேன் வசதியை பெற்றுக் கொள்ளலாம் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே சூப்பர் மேட்டியோர் வைத்திருப்போரும், விங்மேன் கருவியை பெற்றுக்கொள்ள முடியும்.