ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட புல்லட் 350 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சுமார் ரூ.2.15 லட்சம் வரை உள்ளது.
இது ஏற்கெனவே சந்தையில் உள்ள 350 கிளாசிக் மோட்டார் சைக்கிளை விட சுமார் ரூ.19,000 குறைவு. ஹண்டர் 350ஐ விட ரூ.24,000 அதிகம். இந்த புதிய மோட்டார் சைக்கிளில் 349 சிசி ஜெ பிளாட்பார்ம் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 20எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.