ராயல் என்பீல்டு நிறுவனம், புதிய ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 349 சிசி ஏர் கூல்டு ஜெ சீரிஸ் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 20.2 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இடம் பெற்றுள்ளது.
புதிய மேம்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்கில் அதிக குஷன் வைக்கப்பட்டுள்ள சீட்டுகள், பின்புற சஸ்பென்ஷனில் சில மாற்றங்கள், எல்இடி ஹெட் லாம்ப், டைப் சி யுஎஸ்பி சார்ஜர் ஆகியவை புதிய அம்சங்களாகும். இதில் மூன்று வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.1.5 லட்சம். நடுத்தர வேரியண்ட் சுமார் ரூ.1.76 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.1.81 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.